| ADDED : ஜன 23, 2024 11:08 PM
ஓசூர்:ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்திப்பாடலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு, மாணவியை பாராட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் சிவராமன், 60; இவர் மனைவி ஜெயப்பிரியா, 45; இவர்களது மகள் மகன்யாஸ்ரீ, 17. ஓசூர் அசோக் லேலண்ட் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஓசூரில் நடந்த இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகரான மறைந்த எஸ்.பி.பி.,யுடன் இணைந்து பாடியுள்ளார்.ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். மேலும், கோவில்களில் பக்திப்பாடல்கள் மற்றும் கர்நாடகா சங்கீத பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், அயோத்தியில் நேற்று முன்தினம் ராமர் சிலை பிரதிஷ்டை நடந்த நிலையில், ராமர் மீதான அதீத பக்தியால், வீடியோவுடன் கூடிய பக்திப்பாடல் ஒன்றை, மாணவி மகன்யாஸ்ரீ பாடியுள்ளார்.அந்த ஆல்பத்தை, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வெளியிட்டதோடு, பார்த்து ரசித்தார். பின், மாணவி மகன்யாஸ்ரீக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.