உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவர் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலை அருகே கம்புகானப்பட்டி கவுரப்பன் தெருவை சேர்ந்தவர் சத்தி-யராஜ், 32. டிரைவர்; இவரது மனைவி பிரியா, 27. இருவரும், தேன்கனிக்கோட்டை அருகே டி.ஜி.,தொட்டியில் வசிக்கின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி சத்தியராஜ் தக-ராறு செய்து வந்துள்ளார். தேன்கனிக்கோட்டை பட்டேல் தெருவில், தனியார் இருசக்கர வாகன ஷோரூம் அருகே உள்ள தன் தாய் வீட்டில், நேற்று முன்தினம் பிரியா இருந்தார். அங்கு சென்ற சத்தியராஜ், மனைவி பிரியாவை தகாத வார்த்தையால் திட்டி, குடும்பம் நடத்த வர அழைத்தார். அப்போது கத்தியால் மனைவி கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனு-மதிக்கப் பட்டுள்ளார். பிரியா புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் சத்தியராஜை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி