உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனைவியால் எரிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மனைவியால் எரிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 12காவேரிப்பட்டணம் அருகே, கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி, தீ வைத்து கொளுத்தியதில், சிகிச்சையில் இருந்த கணவர் உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் பஞ்., நேருபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 47, கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா, 44. இவர்களுக்கு, 2 மகள்களும், சூர்யா, 23, என்ற மகனும் உள்ளனர்.ரங்கசாமிக்கு, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த, 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 3 மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், கடந்த, 9ல் வீட்டிற்கு வந்தார். குடிபோதையில் இருந்த அவர், வீட்டின் மொட்டை மாடியில் படுத்து துாங்கினார். அன்றிரவு, 11:00 மணியளவில், கடும் கோபத்திலிருந்த கவிதா, கணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார்.அவரது மகன் சூர்யா, தீக்காயங்களுடன் போராடிய ரங்கசாமியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரங்கசாமி நேற்று காலை உயிரிழந்தார். தலைமறைவான கவிதாவை காவேரிப்பட்டணம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை