கிருஷ்ணகிரியில் அறிவிப்போடு நின்ற திட்டங்கள் ஒதுக்கிய நிதி திரும்பி விடுமோ என மக்கள் வேதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நீர்நிலைகளை புனரமைத்து படகு இல்லம், அழகு படுத்த அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப சென்று விடுமோ என மக்கள் வேதனை தெரிவிக்கின்-றனர்.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அருகில், மாநில எல்லை-யோரம் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். இங்குள்ள மக்கள், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் செல்லும் வகையில் சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி நகர் பகுதி மக்களுக்கென்று எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை.கடந்த, 2021, டிச., 29ல் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 16.10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்னஏரி கரையில், கிருஷ்ணகிரி நகராட்சி நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் கீழ், 3.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சின்ன ஏரியை புனரமைத்து அழக்கு படுத்துதல், ஏரிக்கரையை பலப்ப-டுத்தி நடைபாதை தளம், படகு இல்லம் அமைக்க, அப்போ-தைய மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.அதற்காக ஏரியிலிருந்து நீரை வெளியேற்றி, ஏரிக்கரை பலப்ப-டுத்தும் பணி ஓரிரு வாரம் நடந்தது. அதன்பின் பணிகள் நடக்க-வில்லை. அதற்காக முதல்கட்டமாக அரசு நிதியும் ஒதுக்கியது. ஆனால் ஆறு மாதமாகியும் பணிகள் மிக தாமதாக நடந்ததால், பணம் திரும்ப பெறப்பட்டது.அதேபோல, கிருஷ்ணகிரியில்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 15 ஏக்கர் பரப்பளவில் அவதானப்பட்டி ஏரி உள்ளது. இதில், கடந்த, 2005ல், 77 லட்சம் ரூபாய் மதிப்பில், 5 ஏக்கர் அளவில் சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. இந்நி-லையில், சிறுவர் பூங்கா, படகு இல்லத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த, கடந்த சில மாதங்களுக்கு முன், 3.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. படகு இல்லத்திற்கான சுற்றுச்சுவர்கள், படகுகள் நிறுத்த தனி இடம், சைக்கிள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், மேலும் அவதானப்பட்டி ஏரியில் புதிய விளையாட்டு உப-கரணங்கள் அமைத்தல், பூங்காவை அழகுபடுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் துவங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால் இப்பணிகளும் இன்னும் துவங்கவில்லை. கிருஷ்ணகிரி பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களாக திகழும் கே.ஆர்.பி., அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகி-யவற்றிற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கப்படாததால், இந்த நிதியும் திரும்பி சென்றுவிடுமோ என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''சின்ன ஏரி புனரமைப்பு பணி தாமதமாக நடந்ததால் கடந்த, 2022ல், ஒதுக்கப்பட்ட முதல்கட்ட நிதி திரும்ப சென்றது. தற்-போது சின்னஏரியை புனரமைக்கும் பணி, நடைபாதை விளக்குக-ளுடன் கூடிய இருக்கைகள் அமைக்கு பணி, உலகவங்கி உதவி-யுடன், சுற்றுலாத்துறை மூலம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆய்வும் கடந்த மாதம் நடந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்கும்,'' என்றார்.