உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கிய

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கிய

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்-பட்டணம், தி.மு.க., மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த சமூக சேவகர் சங்கர் தருமன், தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.அப்போது முதன்மை செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் பாரதி, செய்தி தொடர்பு தலைவர் இளங்கோவன், மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான சக்கரபாணி, கிருஷ்ணகிரி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.இதேபோல அகசிப்பள்ளி பஞ்., கிட்டம்பட்டியை சேர்ந்த, அ.தி.மு.க., - பா.ம.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை