உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகள் ஆண்கள் சுயஉதவி குழு பெயர் பலகை திறப்பு

விவசாயிகள் ஆண்கள் சுயஉதவி குழு பெயர் பலகை திறப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் கிராமத்தில், எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகள் ஆண்கள் சுயஉதவிக்குழு பெயர் பலகை மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடந்து. தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கிழக்கு மாவட்ட தலைவர் ராஜி தலைமை வகித்தார். பையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோபால், ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ராஜி, ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பையூர் பஞ்., தலைவர் மாதவன், காவேரிப்பட்டணம் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர், சுயஉதவிக்குழு பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனரும், மாநில தலைவருமான கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ