ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடம் திறப்பு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கிராமத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட, கிராம ஊராட்சி செயலக கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது. மேலும் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, சந்துார், வெப்பாலம்பட்டி உள்ளிட்ட, 8 அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.அதேபோல் வேலம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர், 26 பேர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு, காங்., - எம்.பி., கோபிநாத், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மாவட்ட சேர்மன் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.