உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் ஆய்வு

வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் ஆய்வு

வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் ஆய்வு பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 29---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளர் இன மக்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனுக்கள் வழங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று புங்கம்பள்ளம் பகுதியில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கவுள்ள இடத்தை டி.ஆர்.ஓ., கவிதா நேரில் ஆய்வு செய்தார். பின் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லுாரி மாணவியர் விடுதி கட்ட, பஸ் ஸ்டாண்ட் பின்பு உள்ள இடத்தை பார்வையிட்டார். பொம்மிடி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு, வெடிமருந்து கிடங்கை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, ஆர்.ஐ., விமல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி