| ADDED : ஜூலை 04, 2024 11:59 PM
கிருஷ்ணகிரி: பாரண்டப்பள்ளி கிராமத்தில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பாரண்டப்பள்ளி கிரா-மத்தில், அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒருங்கி-ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்-டது. வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம், பயிற்சியை துவக்கி வைத்து பேசும்போது, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியத்துவம், மண் வளத்தை பாதுகாக்க இயற்கை உரங்கள் இடுவது குறித்தும், மண் வளத்தை பாதுகாக்க தக்கைப்பூண்டு இடுவதன் அவசியம், அட்மா திட்டத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கினார்.வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் குணசே-கரன், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்கள் மற்றும் உயிர் உரங்கள் இடுவதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார். பர்கூர் வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி, முதல-மைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்தும், பசுந்தாள் உர பயன்பாடு, இயற்கை வேளாண்மை ஊக்-குவிக்கும் வகையில், மானிய திட்டங்கள், உயிர் உரங்கள் பயன்-பாடு குறித்து விளக்கமளித்தார்.தோட்டக்கலை உதவி அலுவலர் ரமேஷ், உதவி வேளாண் அலுவலர்கள் வீரமணி, குமார் உள்பட, 40 விவசாயிகள் பங்கேற்-றனர்.