மேலும் செய்திகள்
கூடலுாரில் பலாப்பழ சீசன்; வனத்துறை எச்சரிக்கை
27-May-2025
கிருஷ்ணகிரி, பலாப்பழத்தின் சீசன் கடந்த ஏப்., மாதம் துவங்கி, இம்மாதம் முடிகிறது. இதில், வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி, இதய, தோல் ஆரோக்கியம் மேம்படவும், உடல் எடையை குறைக்கவும், எலும்பு ஆரோக்கியம், கண் பார்வை, உடல் ஆற்றலை மேம்படுத்தவும் பலாப்பழம் உதவுகிறது. பல்வேறு நன்மைகள் வாய்ந்த பலாப்பழம், தற்போது பண்ருட்டியில் இருந்து கொண்டு வந்து, கிருஷ்ணகிரி நகரில் சாலையோரம் வைத்தும், வாகனங்களிலும் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ பலாப்பழம் தரத்தை பொறுத்து, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் மணம் அனைவருக்கும் பிடிக்கும் என்பதாலும், பலாப்பழத்தில் அதிக நன்மைகள் உள்ளதாலும் பொதுமக்கள் பலர் பலாப்பழத்தை வாங்கிச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பலாப்பழ விற்பனை ஜோராக நடக்கிறது.
27-May-2025