உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள கட்சி அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த, 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அசோக் பில்லர், மத்திகிரி கூட்ரோடு, ஜூஜூவாடி, ஈஸ்வரி நகரில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கவுன்சிலர் குபேரன், பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன், மஞ்சுநாத், அசோகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை