உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரியில் மூப்பனார் பிறந்த நாள் விழா

கி.கிரியில் மூப்பனார் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மூப்பனார் பிறந்த விழா, தமிழ்நாடு வாசன் தொழிலாளர் காங்கிரஸ் யூனியன் சார்பில் கிருஷ்ணகிரி ராசுவீதியில் நடந்தது. மாநில தலைவர் ராஜாவெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் வரவேற்றார். மூப்பனார் படத்துக்கு பழனிகுமாரும், ராஜீவ் காந்தி படத்துக்கு சீனிவாசனும் மாலை அணிவித்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாது இனிப்புகள் வழங்கினார். விழாவில், சசிகுமார், கோவிந்தன், மோகன், நரேஷ், வினோத், பாபு, அப்பாசாமி, ராஜா, ராமமூர்த்தி, சேட்டு, பயாஸ், இளையராஜா சென்றாயன், தனசேகர், குப்புசாமி ஆகியோர் உள்ளிட்ட பலர்கலந்நுது கொண்டனர். சிவராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி