கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசு-கையில், அடுத்த மாதம் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட கேட்டுக்கொண்டார். கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக, முரசொலி செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்-கப்பட்டது. இதில், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி உள்பட பலர் பங்கேற்-றனர்.