கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், கடந்த, 16ல் கே.ஆர்.பி., அணைக்கு, 3,428 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து, 19ல், 1,082 கன அடி என நீர்வரத்து இருந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 1,784 கன அடியாக நீர்வரத்து அதிக-ரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,358 கன அடி, இடது மற்றும் வலது புற வாய்க்காலில், 178 கன அடி என மொத்தம், 1,536 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.45 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட உள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணா-மலை மாவட்டம் சாத்தனுார் வரை, 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்-வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்-தனர்.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிக பட்சமாக பாம்பாறு அணையில், 60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஊத்தங்கரை, 39, ஓசூர், 24.60, பாரூர், 19.80, போச்சம்பள்ளி, 15, தேன்கனிக்கோட்டை, 13, நெடுங்கல், 12, கெலவரப்பள்ளி அணை, 10, பெனுகொண்டாபுரம், 8.40, ராயக்கோட்டை, 7, கே.ஆர்.பி., அணை, 3.40, சின்னாறு அணை, 2, என மொத்தம், 214.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.