| ADDED : ஜூலை 19, 2011 12:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாதை தகராறில் பெண்ணின் கையை கடித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த ஒம்பலகட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சேட்டு (24), செல்வராஜ் (29), சாலம்மா(50) ஆகியோருக்கும் இடையே பொது வழி பாதை சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்தது. புஷ்பா தனது நிலத்தை உழுவதற்காக பிரச்னைக்குறிய வழியில் டிராக்டரை அழைத்து சென்றுள்ளார். அப்போது, டிராக்டரை சேட்டு தரப்பினர் தடுத்து நிறுத்தினர். இதை புஷ்பா தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சேட்டு உள்ளிட்ட மூன்று பேரும் புஷ்பாவை அடித்து உதைத்து, கையை கடித்தனர். இதில், காயமடைந்த புஷ்பா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., முனிசாமி விசாரித்து, சேட்டு, செல்வராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள சாலம்மாவை போலீஸார் தேடி வருகின்றனர்.