உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு பணிக்கு கலெக்டர் வேண்டுகோள்

மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு பணிக்கு கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலதடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் வங்கி மூலம் மானியம் பெற்ற விவசாயிகள் தங்கள் கிணற்றுக்கு அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசன கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி மூலம் 4,000 ரூபாய் மானியம் பெற்ற விவசாயிகள் உடனடியாக தங்கள் கிணற்றுக்கு அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணியினை 30 நாட்களுக்குள் துவக்கி முழுமையாக முடிக்க வேண்டும். இப்பணியினை முடித்து அதன் விபரத்தை தர்மபுரி உதவி செயற்பொறியாளர் நிலநீர் உபகோட்ட அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கிணற்றுக்கு அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணியினை செய்யாத விவசாயிகளிடம் இருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையினை 9 சதவீத தனி வட்டியுடன் அரசு சட்டப்படி வசூலிக்க நடவடிக்க மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை