உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் 19ம் தேதி நடக்கிறது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் வரும் 19ம் தேதி நடக்கிறது. கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் தலைமை வகிக்கிறார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் காஞ்சனா கமலாநாதன், முன்னாள் எம்.பி., வெற்றி செல்வன், மாவட்ட அவை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்கிறார். பேச்சாளர் வாகை சந்திரசேகர், மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் எம்.பி., சுகவனம் ஆகியோர் பேசுகின்றனர். மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், தனலட்சுமி, ராஜா, மாவட்ட பொருளாளர் முருகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில், திருமலைசெல்வன், தனசேகர், நகர அமைப்பாளர் ராஜா, இலக்கிய அணி எல்லோராமணி மற்றும் அனைத்து நகர, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி