உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்தூரில் நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மத்தூரில் நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மத்தூர்: மத்தூர் அருகே அரசு மருத்துவமனை நர்ஸ் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் 18,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மத்தூரை அடுத்த கன்னன்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருபவர் லதா (25). இவர் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் லதா வீட்டை பூட்டி விட்டு அவரது கணவர் முனிராஜுடன் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை கன்னன்டஅள்ளி திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த லதா வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 5 பவுன் நகை மற்றும் 18,000 ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. மத்தூர் போலீஸ் எஸ்.ஐ., வீரமணி விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை