உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கேட்பாரற்று கிடந்த20 பைக்குகள் பறிமுதல்கிருஷ்ணகிரி: மத்திகிரி போலீசார் பொம்மண்டப்பள்ளி ஜங்ஷன் பழைய ஆர்.டி.ஓ., அலுவலக சாலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று கிடந்த, 20 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.அனுமதியின்றி எருதுவிடும் விழாநடத்தியோர் மீது வழக்கு பதிவுகிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்துள்ளது ஆட்டுக்காரன் கொட்டாய். இந்த ஊரில் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக புகார் சென்றது. அதன்படி பிரசாந்த், 25 மற்றும் சிலர் மீது, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பைக் மோதி விவசாயி பலிகிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60, விவசாயி. இவர், கடந்த, 29ல், யமஹா ஆல்பா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். மாலை, 5:00 மணியளவில் மிட்டப்பள்ளி அருகே ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஹோண்டா யுனிகார்ன் பைக், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவி மாயம்; கணவர் புகார்கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த மாரம்பட்டியை சேர்ந்தவர் சுகன்யா, 27. கடந்த, 27ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுகன்யாவின் கணவர் மஞ்சுநாத் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில், மாரம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தர், 30 என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.பொதுத்தேர்வில் தோல்விபிளஸ் 1 மாணவர் மாயம்கிருஷ்ணகிரி, மே 31-ஊத்தங்கரை அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுவன். இவர், நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார். பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த, 28ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவனின் பெற்றோர் புகார்படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவி மாயம்வாலிபர் மீது புகார்கிருஷ்ணகிரி, மே 31-கல்லாவி அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் கயல்விழி, 19. மொரப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 22ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கயல்விழியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதில், செங்கம்பட்டியை சேர்ந்த சந்துரு, 20 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.நிலப்பிரச்னையில் மோதல்இருதரப்பில் 4 பேர் கைதுகிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த குட்டூரை சேர்ந்தவர் மங்கம்மாள், 37. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா, 60. உறவினர்களான இவர்களுக்குள் தங்கள் நிலங்களை பிரிப்பதில் பிரச்னை இருந்துள்ளது. கடந்த, 27ல், பிரச்னைக்குரிய நிலத்தில் வேலை செய்த மங்கம்மாள், அவரது கணவர் பழனி, 43, ஆகிய இருவரையும் ராஜா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த மாதப்பன், 43 ஆகியோர் உருட்டு கட்டையால் அடித்துள்ளனர். இதில் மங்கம்மாளின் தலை உடைந்தது. இது குறித்து மங்கம்மாள் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் ராஜா, மாதப்பன் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல ராஜா புகார் படி பழனி, மங்கம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை