கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான
ஓட்டுச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழகத்தில்
நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக, கிருஷ்ணகிரி நகராட்சியின், 33
வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளின் வரைவு பட்டியல் கடந்த 8ம்
தேதி நகராட்சியின் மூலம் வெளியிடப்பட்டது. ஓட்டுச்சாவடிகள் அமைப்பது
தொடர்பான ஆலோசனை கூட்டம் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில்,
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு மித்த
ஒப்புதுல் அளித்து நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்த தங்களது
முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர். கூட்டத்தில், அ.தி.மு.க.,சார்பில்
சந்திரையா, சின்னராஜ், ராஜா, வெங்கடாசலம், தி.மு.க.,சார்பில் நடராஜன்,
தே.மு.தி.க.,சார்பில் அரியப்பன், காங்கிரஸ் சார்பில் பெரியசாமி,
ஜான்டேவிட், பா.ஜ.க.,சார்பில் கோட்டீஸ்வரன், பாபுகாந்த்,
ம.தி.மு.க.,சார்பில் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டதிற்கான
ஏற்பாடுகளை நகராட்சி மேலாளர் முருகேசன், நகரமைப்பு அலுவலர் பாஸ்கர்,
தேர்தல் உதவியாளர் சசிகலா ஆகியோர் செய்திருந்தனர். நகராட்சி வருவாய் ஆய்வர்
முபாரக் பாட்ஷா நன்றி கூறினார்.