ஏரி துர்நாற்றம்: மக்கள் போராட்டம்
ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில், தாயப்பா ஏரி உள்ளது. இங்கு, சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரிக்கரை சாலையில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஏரியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியிலுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. போர்வெல் நீரை பயன்படுத்தும் மக்களுக்கு, தோல் அலர்ஜி ஏற்படுகிறது. எனவே, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஏரியை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.