87 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, உலகம் உங்கள் கையில் திட்டத்தில், விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் கலைவாணி வரவேற்றார். தேன்கனிக்-கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, 87 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கினார். பயிற்சி அலுவலர் (பொ) நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.