உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வக்கீல்கள் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வக்கீல்கள் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வக்கீல்கள் சங்க உறுப்பினரான லிகித் என்பவரை, பத்தலப்பள்ளி பகுதியில் வைத்து, ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் என்பவர், பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக, வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று என, 2 நாட்கள், வக்கீல்கள் சங்க தலைவர் சிவசங்கர் தலைமையில், வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.அதனால், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வக்கீல்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை