நாயை கடித்து கொன்ற சிறுத்தை
ஓசூர்:--தேன்கனிக்கோட்டை அருகே, ஊருக்குள் புகுந்த சிறுத்தை, நாயை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உனுசேநத்தத்தில், சிறுத்தை நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். நேற்று காலை, அப்பகுதியில் நாய் ஒன்றை, சிறுத்தை கடித்து கொன்று, பாதியை தின்று விட்டு சென்றது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.