உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயியை அரிவாளால்வெட்டியவர் கைது

விவசாயியை அரிவாளால்வெட்டியவர் கைது

ஓசூர் தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னியாளம் அருகே சின்னதோகரை கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பா, 66, விவசாயி; இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர், 23, என்பவரும் உறவினர்கள். இவர்கள் குடும்பத்திற்குள், நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த, 8 இரவு, 9:00 மணிக்கு முத்தப்பா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்திரசேகர், 'எங்கள் நிலத்தின் மீது வழக்கு போட்டாயா' எனக்கேட்டு தகராறு செய்து, தன்னிடமிருந்த புல் அறுக்கும் அரிவாளால், முத்தப்பாவின் கழுத்து, இடது கன்னத்தில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த முத்தப்பா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், சந்திரசேகரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி