உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டிலிருந்து சென்றவர் மாயம்

வீட்டிலிருந்து சென்றவர் மாயம்

ஓசூர்; கர்நாடகா மாநிலம், சர்ஜாபூர் பகுதியை சேர்ந்த பிரபாகர் மகள் கீதா, 23. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி அருகே கொத்த ஜூகூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். கடந்த, 18ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. பிறப்பிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கீதா எங்கு சென்றார் என்பது தெரியாததால், அவரது அண்ணன் மங்குலு, 34, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான கீதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ