உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குண்டலகுட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

குண்டலகுட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி, குண்டலகுட்டை கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா குண்டலகுட்டை கிராமத்தில் மாரியம்மன் திருவிழா கடந்த, 16 காலை விநாயகருக்கு பொங்கல் வைத்தலுடன் துவங்கியது.மாலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, விஷேச பூஜை நடந்தது. 17 மதியம், 2:00 மணிக்கு, மாரியம்மனுக்கு கிராம மக்கள் கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனை அனுப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதல் நிறைவேற்றினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், 1:30 மணிக்கு, பூசாரிகள் கரகம் சுமந்தும், ஏராளமான பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்தும் கோவிலுக்கு சென்றனர்.இரவு, 9:00 மணிக்கு, மேலுார் ஜவ்வாதிமலை விநாயகா நாடக சபா சார்பில் அம்மன் பிறப்பு நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, குண்டலகுட்டை இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி