உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அரசியல் தலையீடு இருப்பதாக மேயர் தகவல்

ஓசூரில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அரசியல் தலையீடு இருப்பதாக மேயர் தகவல்

ஓசூர்:ஓசூரில், சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் கேட்டு கொண்டபோது, அவற்றை அகற்றுவதில், அரசில் தலையீடு இருப்பதாக, ஓசூர் மாநகர மேயர் சத்யா கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியிலுள்ள காந்தி சிலை, பழைய பெங்களூரு சாலை, நேதாஜி ரோடு, எம்.ஜி.,ரோடு, தாலுகா அலுவலக சாலை, பாகலுார் சாலை, காமராஜ் காலனி, பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை, உழவர் சந்தை சாலை உட்பட நகரின் முக்கிய சாலைகளில், 5,000க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் சாலையோர கடைகள் உள்ளன.அதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. அரசியல் பின்புலம் உள்ளவர்கள், தள்ளுவண்டி கடைகளை தினசரி வாடகைக்கு விட்டு, சம்பாதித்து வருகின்றனர். சாலையோரமுள்ள சாக்கடை கால்வாயிலிருந்து பல அடி முன்பாக வந்து, சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.இந்நிலையில், மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள கடைகளை அகற்ற, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வைத்து, மாநகர மேயர் சத்யாவிடம், காங்., - எம்.பி., கோபிநாத் நேற்று வலியுறுத்தினார். அப்போது மேயர், 'அரசியல் தலையீடு இருப்பதால், கடைகளை அகற்ற முடியவில்லை' என தெரிவித்தார். 'மேயரான நீங்கள் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், காங்., கட்சி, மேயருக்கு ஆதரவாக இருக்கும். எனவே, மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். இல்லா விட்டால், காங்., கட்சி போராட்டத்தில் ஈடுபடும்' என, மேயர் சத்யாவிடம், எம்.பி., கோபிநாத் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக, மேயர் சத்யா உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை