உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, டிச. 10-காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஹள்ளி புதுாரில், ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார்.பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட சங்க தலைவர் ராமசாமி பேசுகையில்,''ஆவின் பால் கொள்முதலை தினசரி ஒரு கோடி லிட்டராக உயர்த்தி, அதற்கான கட்டுமானத்தையும் உருவாக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு திட்டத்தில், பாலையும், பால் சார்ந்த பொருட்களையும் வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி, பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு, 45- ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு, 54 ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போட வேண்டும்,'' என்றார்.* பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஊத்தங்கரை ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன் கறவை மாடுகளுடன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். வி.தொ.ச., மாநில குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை