மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் மினி பஸ் இயக்கம் துவக்கம்
18-Jun-2025
ஓசூர், ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில், 13 புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவையை, கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., நேற்று துவங்கி வைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குக்கிராமங்கள், கிராமங்கள் மற்றும் பஸ் வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில், மினி பஸ் புதிய விரிவான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம், 55 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 73 மினி பஸ்களுக்கு புதிய வழித்தட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 220 கிராமங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில், தற்போது இயங்க தயார் நிலையிலுள்ள, ஓசூர் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட, 12 புதிய வழித்தடங்களில் இயங்கும் மினி பஸ்கள் மற்றும் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட ஒரு வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்சிற்கு, அதன் உரிமையாளர்களிடம் புதிய அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சி, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், புதிய அனுமதி சீட்டுகளை வழங்கி, மினி பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். அதேபோல், பழைய மினி பஸ் திட்டத்தில் இருந்து, புதிய திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட, 15 வழித்தடங்களுக்கான அனுமதி சீட்டும் நேற்று பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஓசூர் ஆர்.டி.ஓ., பிரபாகர், மாநகராட்சி பொதுசுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் ரவி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Jun-2025