உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லிப்டில் சிக்கிய அமைச்சர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,

லிப்டில் சிக்கிய அமைச்சர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலுார் சாலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 'ஓவம்' என்ற தனியார் மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது. கர்நாடகா மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்காரெட்டி திறந்து வைத்தார். முன்னதாக 'பேஸ்மென்ட்' பகுதியில் இருந்து அமைச்சர், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், மருத்துவமனை உரிமையாளர் உள்ளிட்ட பலர், லிப்டில் தரைதளத்திற்கு சென்றனர். 'லிப்ட்' பழுதானதால் அனைவரும் சிக்கி கொண்டனர். 10 நிமிடங்களில் பழுது சரி செய்யப்ட்டு, அனைவரும் பத்திரமாக தரைத்தளத்துக்கு சென்றனர். அமைச்சர் ராமலிங்கா ரெட்டி மன இறுக்கத்துடன் மருத்துவமனையை திறந்து வைத்து சென்றார்.அமைச்சர் தேதி கிடைத்ததால், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யாமல், மருத்துவமனை செயல்பட அரசு துறை அனுமதிவழங்கியதே இதற்கு காரணம் என்றும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை