மேலும் செய்திகள்
எல்.ஐ.சி., முகவர்கள் போராட்டம்
23-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், இன்று (ஆக.28) எரிவாயு முகவர்களுக்கு, மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று (ஆக.28) பிற்பகல், 3:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நடக்க உள்ளது. இந்த, எரிவாயு குறைதீர் நாள் கூட்டத்தில், அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23-Aug-2025