உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒன்றிய அளவில் கலைத்திருவிழா போட்டி 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ஒன்றிய அளவில் கலைத்திருவிழா போட்டி 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி புனித அன்னாள் துவக்கப்பள்ளியில், ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நேற்று நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ராசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். இதில், ஒன்று மற்றும், 2ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மை தயாரித்தல் ஆகிய போட்டிகளும், 3 முதல், 5ம் வகுப்புக்கு, பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்தி பாடல், களிமண் பொம்மை தயாரித்தல், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், ஓவியம் என, 18 வகையான போட்டிகள் நடந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இன்று (அக்.14) 6 முதல், 8ம் வகுப்புக்கு, புனித அன்னாள் பள்ளியிலும், நாளை (அக்.15) 9 மற்றும், 10ம் வகுப்புக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், அக்.16ல், 11 மற்றும், 12ம் வகுப்புக்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை