உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

ஆக்கிரமிப்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் திணறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று வாரச்-சந்தை கூடியது. இதற்காக வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த கோழி, பசு கன்றுகள், காய்கறிகளை, வாரச்சந்தை வளாகத்திற்குள் எடுத்துச் சென்று விற்பனை செய்யாமல், தர்மபுரி- - திருப்பத்துார் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், அருகே போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலும் பொருட்களை வைத்துக் கொண்டும் வியாபாரம் செய்தனர். இதனால், நெடுஞ்சாலையில் வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முடியாமலும், பயணிகளை ரோட்டிலேயே இறக்கி ஏற்றும் சென்றும் வந்தது. இதனால் பய-ணிகள் தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களை கண்டறிந்து ஏற மிகவும் அவதிக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்-பட்டனர்.வாரந்தோறும் இது போன்று நடப்பது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் பல-முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பஸ் ஸ்டாண்ட், திருப்-பத்துார்- - தர்மபுரி மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியா-பாரம் செய்வோரை, சந்தை வளாகத்திற்குள் சென்று, வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை