உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் செல்லும் ஏரி உபரி நீர் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்

சாலையில் செல்லும் ஏரி உபரி நீர் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் சாந்தபுரம் ஏரி நிரம்பி நேற்று முன்தினம் உபரிநீர் வெளியேறியது. இந்த நீர், சாந்தபுரம் மற்றும் பெத்த எலசகிரி, நல்லுார் அக்ரஹாரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில், ஒரு அடிக்கு மேல் சென்றது.இந்த நீரில் ஆபத்தை உணராமல், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடந்து சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், உபரி நீர் செல்லும் பகுதியில், பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை