மேலும் செய்திகள்
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
31-May-2025
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவ-லகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நடந்தது. நிர்வாகி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ஜெயராமன், ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர், கட்டுனிசே கிராமத்தில், ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட கொடுத்த விண்ணப்பங்கள் மீது, காலம் தாழ்த்தாமல் நடவ-டிக்கை எடுத்து, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியு-றுத்தி பேசினர்.நிர்வாகி நாகராஜரெட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி புருேஷாத்தமன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
31-May-2025