ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்வழங்கிய இஸ்லாமியர்கள்கிருஷ்ணகிரி, டிச. 29-கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும், ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன்படி, 7-ம் ஆண்டாக அதன் தலைவர், முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில் கிருஷ்ணகிரி அருகே கொட்டாவூர் கிராமத்தில் நடந்த ஐயப்பன் கோவில் மண்டல பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மத நல்லிணக்கத்தையும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இந்த மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்தா மணிகண்டன் அறக்கட்டளை நிறுவனர் அதியமான் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.