நாகம்மா புற்றுக்கு சிறப்பு பூஜை
ஓசூர்: கெலமங்கலம் நேதாஜி நகர் சுல்தான்பேட்டை யில் நாகம்மா புற்று கோவில் உள்ளது. இங்கு கடந்த, 50 ஆண்டுகளாக விஜயதசமிக்கு அடுத்த நாள், பெண்கள் விரதமிருந்து பூஜை செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டு விஜயதசமி யையொட்டி நுாற்றுக்கணக்கான பெண்கள் விரத மிருந்து, நேற்று நாகம்மா புற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை, கெலமங்கலம் டவுன் பஞ்., துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசைன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.