கி.கிரி அரசு மருத்துவக்கல்லுாரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் பூவதி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக இருந்த டாக்டர் சத்யபாமா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல, தமிழ்நாடு மருத்துவத்துறை, பொதுப்பணி அலுவலர் சங்க மாநில தலைவராக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாக அலுவலர் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுப்பணி அலுவலர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.