அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, 17ம் தேதி (இன்று) மற்றும் வரும், 23 மற்றும் 24ம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 1,096 ஓட்டுச்சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடக்கிறது. வாக்காளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் https://voters.eci.gov.inஎன்ற இணையதள முகவரியில், ApplyOnline/ Correction of entries மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும், மொபைல்போனில், VotersHelpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.