உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிதாக கட்டப்பட்ட 7 ரேஷன் கடை திறப்பு

புதிதாக கட்டப்பட்ட 7 ரேஷன் கடை திறப்பு

பென்னாகரம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பருவதனஅள்ளி புதுார், கொட்டாயூர், பெரியதோட்டம் புதுார், பூதிப்பட்டி, மஞ்சநாயக்கனஅள்ளி, 5வது மைல், பெரியவத்தலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம், 49 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, 7 புதிய ரேஷன் கடை கட்டடங்களை பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் முல்லைக்கொடி, கூட்டுறவு சார் பதிவாளர் அம்பிகேஸ்வரி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர பகுதி நேர நியாய விலை கடை, தற்போது அமைத்து தரப்பட்டுள்ளதால், அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !