பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில், வேட்டியம்பட்டி அடுத்த ராயக்கோட்டையான் கொட்டாயில், 246 குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்க, தேசிய நெடுஞ்சாலையில், 1 கி.மீ., தொலைவிற்கு ஆபத்தான முறையில் பயணித்து, வேட்டியம்பட்டி கிராமத்தில் வாங்கி வந்தனர். இதையடுத்து அக்கிராமத்திற்கு சென்ற, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், ராயக்கோட்டையான் கொட்டாயில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து, பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அசோக்குமார் திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலர்கள் கண்ணியப்பன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் ஆஜி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலர் வெங்கட்ராமன், மாவட்ட மாணவரணி முருகன், கிளை செயலர் ராஜவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.