மேலும் செய்திகள்
முத்து மாரியம்மன் கோவில்மஹா கும்பாபிேஷக விழா
08-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தேசிசெட்டி தெருவிலுள்ள பசுவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 16ல் கங்கா பூஜை, வாஸ்து பூஜை, முதல்கால யாக பூஜை, தீர்த்தம் கொண்டு வருதல், கணபதி பூஜை, பிரவேஷ பலி ஆகியவை நடந்தது. 17ம் தேதி காலை, 2ம் கால யாக பூஜை, கோ பூஜை, ஆலய பிரவேசம், 10:00 மணிக்கு, சுவாமி சிலைகள் நகர் வலம், யாகசாலை பூஜை, 3ம் கால யாக பூஜை, 4ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5ம் கால யாக பூஜை, மகா கணபதி ஹோமம், நாடி சந்தானம், சாந்தி ஹோமம், மகா தீபாராதனை, 9:00 மணிக்கு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
08-Apr-2025