உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தார்ச்சாலையில் பேட்ச் ஒர்க்

தார்ச்சாலையில் பேட்ச் ஒர்க்

தார்ச்சாலையில் 'பேட்ச் ஒர்க்'ஓசூர், டிச. 11-ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 27 வார்டுகளில் முழுமையாகவும், 12 வார்டுகளில் ஒரு பகுதி மட்டும் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்படும் என்பதால், கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே, பணிகள் துவங்கப்பட உள்ள வார்டுகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே மோசமாக உள்ள தார்ச்சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய மாநகராட்சி நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி, ஓசூர் மாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட பினாக்கில் அப்பார்ட்மென்ட், ஜே.ஜே., நகர் ஆகிய பகுதி சாலைகளில் பேட்ச் ஒர்க் நேற்று நடந்தது. இதை, மாநகர துணை மேயர் ஆனந்தய்யா ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை