மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
23 hour(s) ago
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மருதேரி தென்பெண்ணை ஆற்றில், உறை கிணறுகள் அமைக்கப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. உறை கிணறுகளிலிருந்து பைப்லைன் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு சென்று அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.இந்நிலையில், அகரம் கிராமத்திற்கு செல்லும் உறை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீர் செல்வதில்லை. இதனால் அகரம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக குழாயை சீரமைத்து, குடிநீர் வழங்க வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025