உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை

பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கிழக்கு மாவட்ட செயலாளர் மேக-நாதன் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் மேகநாதன் கூறியதாவது: பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் சங்க மாநாட்டிற்கு ஒருங்கி-ணைந்த, பா.ம.க., சார்பில் பெருவாரியான பெண்களை அழைத்து செல்ல இருக்கிறோம். இந்த மகளிர் மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வரும், 25ல் ராமதாசின் பிறந்த நாளை, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொடிகள் ஏற்றி, இனிப்பு, பாட புத்தகங்கள் வழங்கி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். ராமதாசும், அன்புமணியும் எந்த பிரச்னையும் இன்றி ஒன்று சேர வேண்டும். இதை பயன்படுத்தி திராவிட கட்சிகள், பா.ம.க.,வில் ஆட்களை பிடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மேற்கு மாவட்ட செய-லாளர் முருகன், மாவட்ட தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், சுப்பிரமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை