| ADDED : ஜன 15, 2024 11:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில், பொங்கல் விழா, 'சங்கமம் - 2024' என்ற தலைப்பில் நேற்று நடந்தது. வேளாங்கண்ணி பள்ளிக் கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் இயக்குனரும், பள்ளி முதல்வருமான விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பர்கூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவையொட்டி கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையிலுள்ள, மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் இருந்து மாணவ, மாணவியர் முலைப்பாலிகை ஏந்திக் கொண்டும், மாட்டு வண்டியில் சிறுவர்கள் பயணித்தும் ஊர்வலமாக பள்ளியை சென்றடைந்தனர். பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பொங்கல் வைக்கும் போட்டியுடன் விழா துவங்கியது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்களுக்கு, கயிறு இழுத்தல், கோலப்போட்டி, நடனப்போட்டிகள் நடத்தப்பட்டன.