உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டையில் 2 நாட்கள் மின்வெட்டு

தேன்கனிக்கோட்டையில் 2 நாட்கள் மின்வெட்டு

ஓசூர், தேன்கனிக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், மின் வினியோக நிறுவனங்களின் செயல் திறனை அதிகரிப்பது மற்றும் மின் வினியோக உள்கட்டமைப்புகளில் திருத்தம் மேற்கொள்வது ஆகும். அதன் படி, கெம்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து ஜவளகிரி துணைமின் நிலையம் செல்லும் மின்பாதையில் மின் வினியோக உள் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இன்றும், நாளையும் (14, 15 தேதி) நடக்கிறது. அதனால் ஜவளகிரி சொல்லேபுரம், சிவனப்பள்ளி, அரப்பள்ளி, நந்திமங்கலம், மஞ்சளகிரி, சூளகுண்டா, மாடக்கல், கரடிக்கல், அகலகோட்டை, கல்லுபாலம் பள்ளப்பள்ளி, செட்டிப்பள்ளி, பாலதொட்டனப்பள்ளி, பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி