உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி வகுப்பறை, ஆய்வகங்கள் காணொலியில் திறந்த முதல்வர்

பள்ளி வகுப்பறை, ஆய்வகங்கள் காணொலியில் திறந்த முதல்வர்

பள்ளி வகுப்பறை, ஆய்வகங்கள்காணொலியில் திறந்த முதல்வர்கிருஷ்ணகிரி, நவ. 9-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளி வகுப்பறைகள், ஆய்வகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ், 20.31 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள, 104 வகுப்பறை கட்டடங்கள், ஒரு ஆய்வகத்தை நேற்று திறந்து வைத்தார்.இதையொட்டி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சரயு குத்து விளக்கேற்றினார். தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நபார்டு திட்டத்தில், 4.65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 22 வகுப்பறைகளை கலெக்டர் சரயு, மதியழகன் எம்.எல்.ஏ., பார்வையிட்டனர்.பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் சுவாமி நாதன், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ