பெண் டாக்டரை தாக்கிய பல் டாக்டருக்கு காப்பு
ஓசூர்: ஓசூரில், சக பெண் டாக்டரை தாக்கிய பல் டாக்டர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானசந்திரத்தை சேர்ந்தவர் கிருத்திகா, 25; ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே, தனியார் கிளினிக்கில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார்.அங்கு பணியாற்றும் மற்றொரு டாக்டர் அன்புசெல்வன், 38, தன்னை தாக்கியதாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், கிருத்திகா நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு சேர்ந்தார்.ஓசூர் டவுன் ஸ்டேஷனில் அவர் அளித்த புகாரில், 'அன்புசெல்வன் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.'இதற்கு நான் மறுத்ததால், என்னை தாக்கினார். எனக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்' என, தெரிவித்திருந்தார்.ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அனில் வாகரே விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அன்புசெல்வனை போலீசார் நேற்று கைது செய்தனர்.